அப்போஸ்தலர்களுடைய நடபடிகள்
ஆசிரியர்
மருத்துவராகிய லூக்கா, இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அப்போஸ்தலர்களின் பல நிகழ்வுகளுக்கு லூக்கா ஒரு கண்கண்ட சாட்சியாக இருந்தார். பல பகுதிகளில் நாம் என்ற பதத்தைப் பயன்படுத்துவதிலிருந்து இது உறுதியாகிறது. (16: 10-17; 20: 5-21: 18; 27: 1-28: 16). பாரம்பரியமாக அவர் ஒரு சிறந்த மனிதராக கருதப்பட்டார், குறிப்பாக அவர் ஒரு சுவிசேஷகனாக இருந்தார்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60-63 ன் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட இடங்கள் எவையெனில் எருசலேம், சமாரியா, லித்தா, யோப்பா, அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை, பிலிப்பி, தெசலோனிக்கே, பெரோயா, ஏதென்ஸ், கொரிந்து, எபேசு, செசரியா, மெலித்தா, ரோம் ஆகியனவாகும்.
யாருக்காக எழுதப்பட்டது
தெயோபிலுவுக்கு லூக்கா எழுதினார் (அப்போஸ்தலர் 1: 1). துரதிருஷ்டவசமாக, தெயோபிலு யார் என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை. லூக்காவின் ஆதரவாளராக இருந்திருக்கலாம் அல்லது தெயோபிலு என்ற பெயர், தேவனை நேசிப்பவர் என்று பொருள்படும் உலகளாவிய எல்லா கிறிஸ்தவர்களையும் குறிப்பதற்காக இருக்கலாம் என்று சில சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
எழுதப்பட்ட நோக்கம்
அப்போஸ்தலருடைய நடபடிகளின் நோக்கம் சபையின் பிறப்பு மற்றும் வளர்ச்சியைப் பற்றிய காரியங்களைக் கூறுவதாகும். இது யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் சுவிசேஷங்களில் அவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் செய்தி ஆகியவற்றைத் தொடர்கிறது. பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியின் வருகையிலிருந்து கிறிஸ்தவம் பரவிய காரியங்களை இது நமக்குக் கொடுக்கிறது.
மையக் கருத்து
சுவிசேஷத்தின் பரவுதல்
பொருளடக்கம்
1. பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம் — 1:1-26
2. பெந்தெகொஸ்தே: பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு — 2:1-4
3. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் செய்த ஊழியமும், எருசலேம் சபைக்கு உண்டான உபவத்திரவங்களும் — 2:5-8:3
4. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் யூதேயாவிலும் சமாரியாவிலும் செய்த ஊழியங்கள் — 8:4-12:25
5. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் உலகின் கடைமுனைவரை செய்த ஊழியங்கள் — 8:4-12:25