யோவான்
ஆசிரியர்
செபதேயுவின் மகனாகிய யோவான், யோவான் 21:20, 24 ன்படி இந்தச் சுவிசேஷத்திற்கு ஆசிரியர் ஆவார். இது இயேசுவை மிக அதிகமாக நேசித்த சீஷனும், “இயேசுவால் நேசிக்கப்பட்ட சீஷன்” என்று தன்னையே அழைத்துக்கொண்டவனின் படைப்பாக இருக்கிறது. இவரும் இவருடைய சகோதரன் யாக்கோபும் “இடிமுழக்க மக்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள் (மாற்கு 3:17). இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய கண்கண்ட சாட்சியாகவும், சாட்சி கொடுப்பதற்கும் பிரத்தியேகமான பாக்கியம் அவர்களுக்கு இருந்தது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறத்தாழ கிபி 50-90 காலகட்டங்களில் எழுதப்பட்டது.
யோவானின் நற்செய்தி எபேசுவிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம், எழுத்தப்பட்ட முக்கிய இடங்கள் யூதேயா நாட்டுப்புறமான சமாரியா, கலிலேயா, பெத்தானியா, எருசலேம் ஆகியவை.
யாருக்காக எழுதப்பட்டது
யோவானின் நற்செய்தி யூதர்களுக்கு எழுதப்பட்டது. இயேசுவே மேசியா என்று யூதர்களுக்கு நிரூபிக்க இந்த சுவிசேஷம் எழுதப்பட்டது. இயேசுவே, கிறிஸ்து என்று அவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய நாமத்தில் நித்தியஜீவன் உண்டு என்பதைக் கூறும்படியாகவும் அவர்களுக்கு விவரங்களை வழங்கினார்.
எழுதப்பட்ட நோக்கம்
யோவான் நற்செய்தியின் நோக்கம், யோவான் 20:31 ல் குறிப்பிடப்பட்டுள்ள “விசுவாசத்தில் கிறிஸ்தவர்களை உறுதிப்படுத்தி பாதுகாக்க வேண்டும்” என்பதாகும். ஆனால் இயேசுவே கிறிஸ்துவாகவும், தேவனுடைய குமாரனாகவும் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், அவரது நாமத்தில் நித்தியஜீவன் உண்டு என்பதை நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் வெளிப்படையாக, அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்திய, (யோவான் 1.1) இயேசுவே, தேவன் என்று அறிவித்தார் (யோவான் 1.3). அவர் ஒளியாக (யோவான் 1.4, 8.12) மற்றும் ஜீவனாக இருக்கிறார் (யோவான் 1.4, 5.26, 14.6). இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நிரூபிக்க யோவான் நற்செய்தி எழுதப்பட்டது.
மையக் கருத்து
இயேசு-தேவனுடைய மகன்
பொருளடக்கம்
1. இயேசுவே ஜீவாதிபதி — 1:1-18
2. முதல் சீஷனின் அழைப்பு — 1:19-51
3. இயேசுவின் பொது ஊழியம் — 2:1-16:33
4. பிரதான ஆசாரியனின் முறையில் ஜெபித்தல் — 17:1-26
5 கிறிஸ்துவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் — 18:1-20:10
6. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு செய்த ஊழியம் — 20:11-21:25