லூக்கா
ஆசிரியர்
பண்டைய எழுத்தாளர்களின் ஒருமித்த நம்பிக்கை என்னவெனில் எழுத்தாளர் லூக்கா, மருத்துவராக இருந்தார். அவரது எழுத்துக்களிலிருந்து பார்க்கும்போது, அவர் இரண்டாவது தலைமுறை கிறிஸ்தவர் என்று தோன்றுகிறது என்பதாகும். பாரம்பரியமாக அவர் ஒரு நல்ல மனிதராக கருதப்படுகிறார், குறிப்பாக ஒரு நற்செய்தியாளராக இருந்தார், சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் புத்தகத்தையும் எழுதி, பவுலுடன் இணைந்து மிஷனரி ஊழியத்தையும் நிறைவேற்றினார் (கொலோ 4:14; 2 தீ. 4:11; பிலிப்பியர். 24).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறத்தாழ கிபி 60-80 காலகட்டத்தில் எழுதப்பட்டது.
லூக்கா தனது புத்தகத்தை செசரியா பட்டணத்தில் ஆரம்பித்து ரோமில் முடித்தார். எழுத்தின் முக்கிய இடங்கள் பெத்லகேம், கலிலேயா, யூதேயா மற்றும் எருசலேம் ஆகியவை ஆகும்.
யாருக்காக எழுதப்பட்டது
லூக்காவின் புத்தகம் தெயோப்பிலுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அப்பெயரின் அர்த்தம் தேவனை நேசிப்பவர் என்பதாகும். அவர் ஏற்கனவே ஒரு கிறிஸ்தவராக இருந்தாரா, அல்லது அவர் கிறிஸ்தவராக மாறி வருகிறாரா என்பது தெளிவாக இல்லை. லூக்கா அவரை மிகச் சிறந்தவராக (லூக்கா 1:3) அடையாளப்படுத்துவதன் காரணம் அவர் ஒரு ரோமானிய அதிகாரி என்று குறிப்பிடுகிறார், பல விதமான சான்றுகள் புறஜாதி வாசகர்களைக் குறிக்கின்றன, அவருடைய முக்கிய கவனம் மனிதகுமாரன் மற்றும் தேவனுடைய இராச்சியம் ஆகியவை ஆகும் (லூக்கா 5:24, 19:10, 17:20-21, 13:18).
எழுதப்பட்ட நோக்கம்
இயேசுவின் வாழ்க்கை பற்றிய ஒரு விளக்கம், லூக்கா இயேசுவை மனிதகுமாரனாக முன்வைக்கிறார், அவர் தெயோப்பிலுவுக்கு எழுதியுள்ளார், அதனால் அவர் கற்பிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி பரிபூரணமான புரிந்துணர்வுடன் இருக்கலாம் (லூக் 1:4). இயேசுவைப் பின்பற்றுவோருக்குத் துன்புறுத்துவது அல்லது கெட்டது எதுவுமே இல்லை என்பதைக் காட்டுவதற்கு துன்புறுத்தலின் சமயத்தில் லூக்கா கிறிஸ்தவத்தை பாதுகாப்பதற்காக எழுதுகிறார்.
மையக் கருத்து
இயேசு பூரணமான மனிதர்.
பொருளடக்கம்
1. இயேசுவின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை — 1:5-2:52
2. இயேசுவின் ஊழியத்தின் தொடக்கம் — 3:1-4:13
3. இரட்சிப்பின் காரணரான இயேசு — 4:14-9:50
4. இயேசு சிலுவைக்கு சென்ற பாதை — 9:51-19:27
5. எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிகரமான பிரவேசம், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் — 19:28-24:53