ஒபதியா
ஆசிரியர்
இந்த புத்தகமே, ஆசிரியர் ஒபதியா என்று சொல்கிறது, இதை தவிர, வேறுக்காரியங்கள் அறியப்படவில்லை. ஏதோம் தேசத்தின் மீது வரும் நியாயத்தீர்ப்பை சொல்லுகிறது, மற்றும் ஒபதியா, யூத தேசத்தை சேர்ந்தவன் என்றும் குறிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 605 க்கும் 586 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
எருசலேம் விழுந்த பிறகு, பாபிலோனின் சிறையிருப்புக் காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
யூத மக்களுக்கு எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
ஏதோம் தேவனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் விரோதமாக செய்த பாவத்தை தீர்க்கதரிசி ஒபதியா மூலமாக கண்டிக்கிறார். ஏதோமியர்கள் ஏசாவின் சந்ததியார்கள், இஸ்ரவேலர்கள் ஏசாவின் தம்பியான யாக்கோபின் மக்கள். இந்த இரு சகோதரர்களின் சண்டை, அவர்களின் வம்சங்களையும் பாதிக்கிறது. இந்த பாதிப்பினால், இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு கானானுக்கு, தங்கள் தேசத்தின் வழியாக செல்ல, எதோமியர்கள் தடைசெய்தார்கள். ஏதோமின் பெருமை என்ற பாவத்திற்கு, தேவனிடத்திலிருந்து தண்டனைக்குரிய வார்த்தைகளை வரவித்தது. தேசம் அவர்களுக்கு சொந்தமாகும் கடைசி நாட்களில், சீயோன் விடுவிக்கப்படும் என்ற தேவனின் வாக்குதத்தோடு இந்த புத்தகம் முடிவடைகிறது.
மையக் கருத்து
நீதியான நியாயத்தீர்ப்பு.
பொருளடக்கம்
1. ஏதோமின் பாழ்கடிப்பு — 1:1-14
2. இஸ்ரவேலின் முடிவான வெற்றி — 1:15-21