தானியேல்
ஆசிரியர்
பாபிலோனின் இருந்த காலத்தில் இஸ்ரவேலிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட யூதனாகிய தானியேலின், பெயரிலேயே எழுதப்பட்டது. தானியேலின் அர்த்தம், “தேவனே என் நியாயாதிபதி” தானியேலில் உள்ள 9:2, 10:2 ன்படி இதன் ஆசிரியர் தானியேல் தான் என்று உறுதிப்படுத்துகிறது. பாபிலோனின் தலைநகரில் தன்னுடைய சிறையிருப்பின் அனுபவங்களையும் தீர்க்கதரிசனங்களையும் பதிவு செய்திருக்கிறார். அவன் ராஜாவின் அரண்மனையில் சேவை செய்ததால் உயர் அதிகாரிகளின் மத்தியில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய மத கலாச்சாரத்துக்கு வேறுப்பட்ட நாட்டிலும் தன் தேவனுக்கு உண்மையாய் இருந்தது எல்லா மக்களுக்கும் மிக பெரிய முன் மாதிரியாய் இருக்கிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்.
ஏறக்குறைய கிமு. 605 க்கும் 530 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது.
பாபிலோனிலிருந்த யூத சிறையிருப்பு மக்களுக்கும் வேதத்தை பிற்காலத்தில் வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகத்தில் தானியேலின் தீர்க்கதரிசனங்களையும், தரிசனங்களையும், நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேவன் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார் பூமிக்குறிய பணிகளை செய்யும்போது வரும் சோதனைகள், கட்டாயப்படுத்துதல்கள், மத்தியிலும் தேவனுடைய காரியங்களில் உண்மையிருக்க போதிக்கிறது.
மையக் கருத்து
தேவனின் சர்வதிகாரம்.
பொருளடக்கம்
1. பெரிய சிலையின் சொப்பனத்தின் அர்த்தத்தை தானியேல் வெளிப்படுத்தினான். — 1:1-2:49
2. சாத்ராக் மேஷாக், ஆபேத்நேகோ அக்கினி சூளையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். — 3:1-30
3. நேபுகாத்நேச்ச்சரின் சொப்பனம் — 4:1-37
4. அசையும் கைவிரல்களும், தானியேல் சொன்ன அழிவின் தீர்க்கதரிசனமும். — 5:1-31
5. சிங்க குகையில் போடப்பட்ட தானியேல். (6:1-28). — 6:1-28
6. நாலு பெரிய மிருகங்களின் தரிசனம். — 7:1-28
7. ஆட்டுக்கடா, வெள்ளாட்டுகடா, சின்னகொம்புகளின் தரிசனம். — 8:1-27
8. 70 வருடத்தின் சிறையிருப்புக்காக செய்யப்பட்ட ஜெபம் கேட்கப்பட்டது. — 9:1-27
9. கடைசிக்கால யுத்தத்தின், தானியேலின் தரிசனம் — 10:1-12:13