எசேக்கியேல்
ஆசிரியர்
பூசி என்ற ஆசாரியனும் தீர்க்கத்தரிசினுடைய மகனுமான எசேக்கியேல் இந்த புத்தகத்தின் ஆசிரியர். ஆசாரியன் குடும்பத்தில் எருசலேம் பட்டணத்தில் வளர்க்கப்பட்டவன், சிறையிருப்புக் காலத்தில் பாபிலோனில் யூதர்கள் மத்தியில் வாழ்ந்தவன். எசேக்கியேலின் ஆசாரிய வம்சம்வழி, அவனுடைய புத்தகத்தில் சொல்லப்பட்டக் காரியங்களான: தேவாலயம், தேவனின் மகிமை, ஆசாரியம், பலி முறைகள் மூலமாக அறியப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 593 க்கும் 570 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல், எகிப்து, மற்ற பக்கத்து நாடுகளைக் குறித்து எசேக்கியேல் பாபிலோனிலிருந்து எழிதினான்.
யாருக்காக எழுதப்பட்டது
பாபிலோனில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கும் தன் தேசத்தில் வாழ்ந்தவர்களுக்கும் வேதம் வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தன் காலத்தில் வாழ்ந்த பாவமுள்ள, நம்பிக்கையே இல்லாத மக்களுக்கு ஊழியம் செய்தான். தன் ஊழியத்தின் மூலமாக தன்னுடைய மக்கள் சீக்கிரமாக மனத்திரும்பி எதிர்க்காலத்தில் நம்பிக்கைக்குள் கொண்டுவர முயற்சித்தான். தேவன் தம்முடைய மனித தூதர்கள் மூலமாக தோல்வியிலும் துக்கத்திலும் கிரியை செய்கிறார், தேவனுடைய சர்வ வல்லமையை ஏற்றுக்கொள்ளவேண்டும், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது, தேவன் எங்கும் இருக்கிறார், அவரை எங்கும் தொழுதுக்கொள்ளலாம் என்று உபதேசித்தான். நம்முடைய இருண்ட நேரத்தில் நம்மையே ஆராய்ந்து தேவனுடைய உபதேச சத்தியங்களுடன் ஒப்பிட்டு தேவனை தேடப் படிப்பிக்கிறது.
மையக் கருத்து
தேவனுடைய மகிமை
பொருளடக்கம்
1. எசேக்கியேலின் அழைப்பு. — 1:1-3:27
2. எருசலேம், யூதாவுக்கும், தேவாலயத்திற்கும் விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 4:1-24:27
3. மற்ற நாடுகளுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள். — 25:1-32:32
4. இஸ்ரவேலரைக்குறித்தத் தீர்க்கதரிசனங்கள் — 33:1-39:29
5. திரும்பபெறுவதைக் குறித்த தரிசனம் — 40:1-48:35