எரேமியா
ஆசிரியர்
எரேமியாவும் அவனுடைய உதவியாளன் பாருக்கும் எழுதினார்கள். இல்கியாவின் குமாரன் எரேமியா ஆசாரியானகவும் தீர்க்த்தரிசியாகவும் சேவை செய்தான். சிறிய ஊரான ஆனதோத்திலிருந்து வந்தவன். (1:1). பாருக் இவனுக்கு உதவியாளனாக இருந்து எரேமியா சொன்ன தீர்க்கதரிசனங்களை எழுதி, தொகுத்து பத்திரப்படுத்தினான். (36:4, 32; 45:1). அழுகிற தீர்க்கதரிசி என்று அறியப்பட்டிருந்தான். (பார்க்க. எரேமி. 9:1; 13:17; 14:17).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்:
ஏறக்குறைய கிமு. 626 க்கும் 570 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த புத்தகம் பாபிலோனின் சிறையிருப்பில் எழுதி முடிக்கப்பட்டது. சிலர் அதன் பிறகு முடித்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
யாருக்காக எழுதப்பட்டது?
யூதா, மக்களுக்கும், எருசலேமின் ஜனங்களுக்கும், பின்பு வேதத்தை வாசிக்கிற மக்கள் அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்:
பூமியில் இயேசுகிறிஸ்து வந்தபிறகு, தேவன் தம்முடைய மக்களோடு புதிய உடன்படிக்கையை செய்வேன் என்பதை தெளிவாக கட்டுகிறான். புதிய உடன்படிக்கை, தேவ மக்களை, தம்மோடு மறுபடியுமாக சேர்த்துக்கொள்ளும் காரியமாகும். அதை அவர் கல்லின்மேல் அல்ல, இருதயத்தின் மேல் எழுதுகிறார், யூதா தேசம் மனம்திரும்பாவிட்டால், அழிவு வரும் என்று எரேமியா பதிவு செய்கிறான். தேசம் தேவனிடம் திரும்பும்படி அழைக்கிறான். யூத தேசத்தின், மனம்மாறாத, விக்கிரகாரியங்களினிமித்தமும் விபச்சாரத்தினிமித்தம் அதின் மேல் தவிர்க்கமுடியாத அழிவு வருவதை அறிந்திருந்தான்.
மையக் கருத்து:
நியாயத்தீர்ப்பு
பொருளடக்கம்:
1. எரேமியாவின் தேவ அழைப்பு — 1:1-19
2. யூதாவுக்கு எச்சரிப்பு — 2:1-35:19
3. எரேமியாவின் பாடுகள் — 36:1-38:28
4. எருசலேமின் வீழ்ச்சியும் அதின் விளைவும் — 39:1-45:5
5. மற்ற தேசங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் — 46:1-51:64
6. சரித்திர பின்சேர்க்கை — 52:1-34