எஸ்றா
ஆசிரியர்
எபிரேய பாரம்பரியம் எஸ்றா தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர் என்று உறுதிப்படுத்துகிறது. இவன் பிராதான ஆசாரியன், ஆரோனின் வம்சவழியில் வந்தவன். ஆகையால் ஆசாரியனும் வேதபாரகனுமயிருந்தான். (7:1-5). பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஸ்டா அரசாளுகிற காலத்தில் தேவனுக்காக வைராக்கியம் கொண்டு, ஒரு கூட்ட யூதர்களை பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வழி நடத்தினவன்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 7 க்கும் 440 க்கும். இடையில் எழுதப்பட்டது.
பாபிலோனிலிருந்து திரும்பி எருசலேமுக்கு வந்த பிறகு யூத தேசத்தில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
பாபிலோனிலிருந்து திரும்பி எருசலேமுக்கு வந்த இஸ்ரவேலர்களுக்கும் வரும்காலத்தில் வேதத்தை வாசிப்பவர்களுக்கும்.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் எஸ்றா மூலமாக ஜனங்களை தங்கள் சொந்த நாட்டிற்கு சரீரப் பிரகாரமாக அழைத்து வந்தார். ஆவிக்குரிய பிரகாரமாக எஸ்றா, வேதம் வாசித்து விளக்கியதின் மூலமாக ஜனங்களை பாவங்களிலிருந்து மனம் திரும்ப செய்தார். தேவனுக்கு ஊழியம் செய்யும்போது அவிசுவாசிகளிடத்திலிருந்தும் அந்தகார வல்லமைகளிடத்திலிருந்தும் பெரிய எதிர்ப்புகள் வரும். முன்னமே ஆயுத்தமாயிருந்தால் எதிர்ப்புகளை சந்திக்க பலமுள்ளவர்களாய் இருப்போம். நம்முடைய முன்னேற்றத்திற்கு விரோதமான தடைகளை விசுவாசத்தின் மூலமாய் தகர்க்கலாம். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய திட்டங்களை நிறைவேற்ற, பயமும் சோர்வுமான இரண்டு பெரிய தடைகள் வரும் என்று இந்த புத்தகம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
மையக் கருத்து
மறுசீரமைப்பு
பொருளடக்கம்
1. செருபாபேல் தலைமையில் வந்த முதல் சிறையிருப்பு மக்கள் — 1:1-6:22
2. எஸ்றா தலைமையில் வந்த இரண்டாம் சிறையிருப்பு மக்கள் — 7:1-10:44