யோசுவா
ஆசிரியர்
இந்த புத்தகத்தில், இதின் ஆசிரியர் யார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. நூனின் குமாரனாகிய யோசுவா, மோசேக்கு பிறகு இஸ்ரவேலின் தலைவனானான், இந்த புத்தகத்தின் அதிக பகுதிகளை எழிதினான். யோசுவாவின் மரணத்தின் பிறகு வேறொருவர் அவருடைய மரணத்தைக் குறித்து எழிதியிருக்கிறான். அனேகபகுதிகள் அவருடைய மரணத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மோசேயின் மரணத்திலிருந்து கானான் தேசத்தை யோசுவாவின் தலைமையில் சொந்தமாக்கி கொண்ட சரித்திரங்கள் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு 1,405 க்கும் 1,385 கி. மு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
கானான் தேசத்தை யோசுவா ஜெயித்ததினால், கானான் தேசத்தில் தான் எழுதபட்டிருக்கவேண்டும்.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் வருங்காலத்தில் வேதத்தை வாசிப்பவர்களுக்காகவும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் வாக்கு பண்ணின பகுதிகளை எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற இராணுவ தந்திரங்களை, திட்டங்களை இந்த புத்தகம் அளிக்கிறது. எகிப்தை விட்டு வெளியே வந்தபிறகு, 40, வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த பிறகு, முறுமுறுத்தவர்கள் மரித்த பிறகு, புதிய இஸ்ரவேல் சந்ததி எழும்பி கானான் தேசத்தை சுததந்திரித்துக்கொள்ள ஆயுத்தமாக இருந்தார்கள். தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் உடன்படிக்கையின்படி வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் எப்படி ஸ்தபிக்கப்பட்டார்கள் என்று விளக்குகிறது. சீனாய் மலையில் இஸ்ரவேல் ஜனங்களுடன் செய்த உடன்படிக்கைக்கும் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த வாக்குத்தத்திற்கும் யெகோவா தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதை இந்த புத்தகம் உறுதிப்படுத்துகிறது. தேவ ஜனங்கள் உடன்படிக்கைக்கும் ஒற்றுமைக்கும், நல்நடக்கைக்கும் பாத்திரமாக வாழ. வேண்டும் என்று இந்த வேதவசனங்கள் போதிக்கிறது.
மையக் கருத்து
ஜெயம்கொள்ளுதல்
பொருளடக்கம்
1 வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசம் — 1:1-5:12
2 தேசத்தை ஜெயித்தல் — 5:13-12:24
3 தேசத்தை பங்கிடுதல் — 13:1-21:45
4 கோத்திரங்களின் ஒற்றுமையும் யெகோவா தேவனிடத்தில் உண்மையாய் இருப்பதின் அவசியம் — 22:1-24:33