தெற்றுகுற்றத ஷெமிப்பத்துள்ளா சோரெ சிந்துதன பற்றிட்டுள்ளா நேம
சமாதான ஹரெக்கெ களிப்பத்துள்ளா சல (17:1-9)
17
எந்தட்டு நித்திய தெய்வ மோசேதகூடெ, 2 நனங்ங பூஜாரி கெலச கீவா ஆரோனாகூடெயும், அவன மக்களகூடெயும், இஸ்ரேல்காறாகூடெயும் நீ ஹளத்துள்ளுது ஏனொக்க ஹளிங்ங,3-4 இஸ்ரேல்காறாளெ ஒப்பாங் ஒந்து எத்தினோ, செம்மரி ஆடோ, கோலாடு முட்டனோ, நன்ன கூடாரமெனெத அங்களாக கொண்டுபாராதெ, ஆக்க குடியிப்பா சலாளெயோ, ஹொறெகெயோ பீத்து கொந்நங்ங, அதன கொந்தா குற்றம் அவன தெலேமேலெ தென்னெ பொக்கு. அந்த்தலாவன இஸ்ரேல் ஜாதியாளே சேர்சத்தெ பாடில்லெ. 5 ஈ கல்பனெ ஏனாக தப்புது ஹளிங்ங, சமாதான ஹரெக்கெத ஆக்க பிஜாரிசிதா சலாளெ களியாதெ, அதன நன்ன கூடாரமெனெத அங்களாக கொண்டுபந்தட்டு, அல்லி பீத்து பூஜாரிதகையி கொட்டு ஹரெக்கெ களிக்கு ஹளிட்டுள்ளுதங்ங ஆப்புது. 6 அம்மங்ங பூஜாரி அதன ஹரெக்கெ களிச்சு, அதன சோரெத, தெய்வத ஹரெக்கெ திம்பதமேலெ உஜ்ஜி, அதன கொளுப்பு ஒக்க ஹரெக்கெ திம்பத கிச்சினாளெ ஹைக்கி கவுசுக்கு. அம்மங்ங அதனாளெந்த பொப்பா ஒள்ளெ வாசனெத தெய்வ மணசிட்டு சந்தோஷப்படுகு.
7 எந்நங்ங இந்த்தல நேமத மீறி, தெய்வாக துரோக கீவா ஹாற உள்ளா ரீதியாளெ(பேசித்தர) ஆடின பிம்மாகோ, அசுத்த ஆல்ப்மாவிகோ இந்த்தல ஹரெக்கெ கொடத்தெ பாடில்லெ. ஈ நேமத எல்லாரும் தெலெமொறெ தெலெமொறெயாயிற்றெ கைக்கொள்ளுக்கு.
8-9 ஈ நேமத நிங்களும் கைக்கொள்ளுக்கு. நிங்களகூடெ இப்பா மற்று ஜாதிக்காரும் கைக்கொள்ளுக்கு. அந்த்தெ தெய்வாக பூரண ஹரெக்கெ கொடத்துள்ளுதன தீர்ச்செயாயிற்றும் கூடாரமெனெக கொண்டுபந்து கொட்டிருக்கு. அதுபுட்டட்டு பூரண ஹரெக்கெத கூடாராக கொண்டுபாராதெ, பேறெ ஏதோ ஒந்நங்ங ஹரெக்கெ கொடாக்கள நிங்கள எடநடு இப்பத்தே புடத்தெபாடில்லெ.
மிருகத சோரெ திம்பத்தெ பாடில்லெ ஹளியும், அதன ஏன கீயிக்கு ஹளியும் (17:10-14)
10 அதுமாத்தற அல்ல, இதனாளெ ஹரெக்கெ களிச்சா ஆடின சோரெத குடிப்பாவனோ, அதன கறிமாடி திம்மாவனோ அவன நா சத்துருவாயிற்றெ கரிதி, ஆக்கள நிங்கள எடநடுவு இறாத்த ஹாற நாசமாடுவிங். 11 ஏனாக ஹளிங்ங, ஏதொந்து ஜீவித ஒளெயெ ஓடா சோரெகொண்டாப்புது அது ஜீவோடெ இப்புது. ஆ சோரெகொண்டாப்புது நா நிங்கள ஜீவிதாளெ உட்டாதா தெற்றுகுற்றத ஷெமிச்சு, நிங்கள சுத்தமாடி ஜீவுசத்தெ பீப்புது. 12 அதுகொண்டு நிங்க ஒரிக்கிலும் சோரெத திம்புதோ குடிப்புதோ பாடில்லெ. 13 அதுகூடாதெ ஒப்பங், ஏதிங்ஙி மிருகதோ, ஹக்கிலினோ கொந்நங்ங அதன கறிமாடி திம்புதனமுச்செ, அதன சோரெத ஒக்க நெலதாளெ ஊற்றி மண்ணுமூடியுடுக்கு. 14 ஏனாக ஹளிங்ங, ஏதொந்து ஜீவித ஜீவங் அதன சோரெயாளெ ஆப்புது உள்ளுது. அதுகொண்டு நிங்களாளெ ஒப்புரும் சோரெத திம்பத்தெ பாடில்லெ. அந்த்தெ திம்பாக்கள நிங்கள ஜாதியாளே சேர்சத்தெ பாடில்லெ.
சத்துதன திந்தாக்க, தங்கள சுத்திகரண கீவுது (17:10-14)
15 அதுகூடாதெ தென்னெ சத்தா ஏதொந்நனும் செரி, பேறெ ஏதிங்ஙி மிருக கச்சி கொந்துதனும் திம்பத்தெ பாடில்லெ. அந்த்தலதன ஏரிங்ஙி கறிமாடி திந்துதுட்டிங்ஙி, அவங் அசுத்தி உள்ளாவாங். அவங் தன்ன துணிமணி ஒக்க ஒகத்து மீந்து, அந்து சந்நேரட்ட அசுத்தி உள்ளாவனாயி இருக்கு. 16 அவங் துணிமணி ஒகத்து மீந்துதில்லிங்ஙி, அவங் குற்றக்காறனாப்புது. அதங்ஙுள்ளா சிட்ச்செயும் உட்டு>> ஹளி ஹளித்து.